நாடி சோதிடம்

நாடி சோதிடம் என்பது ஒருவரின் கைரேகையைக் கொண்டு, அவரைப் பற்றி ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டு பிடித்து அதிலுள்ள அவர்சார்ந்த விசயங்களை வாசித்து விளக்கிக்கூறுவதாக நம்பப்படும் ஒரு கலையாகும். ஆண்களாயின் வலது கட்டைவிரல் (பெருவிரல்) கைரேகையும் பெண்களாயின் இடது கட்டைவிரற் கைரேகையும் பெறப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட சுவடிகள் 2000 வருடப் பழமை வாய்ந்தவை. இந்த சுவடிகளை ஏழு முனிவர்களான (சப்தரிஷிகளான) அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஸ்டர், மற்றும் வால்மீகி போன்றோர் எழுதியதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் அகத்திய முனிவரின் பெயரிலேயே ஒலைகள் கிடைக்கின்றன. இந்த ஒலைச்சுவடிகளையே சோதிடக்குடும்பத்தினர் வைத்தீசுவரன்கோயிலில் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். பரம்பரையாக ஒருவர் பின் ஒருவராக இக்கலையை அவர்கள் அறிந்துவைத்திருக்கின்றனர்.
முதலாவது காண்டம் - வாழ்க்கையின் பொதுப்பலன்களை பொதுவாகக்கூறுவது.
இரண்டாவது காண்டம் - குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் முதலியவை பற்றி கூறுவது.மூன்றாவது காண்டம் - சகோதரர்கள் தொடர்பான விடயங்களை கூறுவது
நான்காவது காண்டம் - தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு முதலியவற்றையும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றியும் கூறுவது.
ஐந்தாவது காண்டம் - பிள்ளைகள் பற்றி கூறுவது
ஆறாவது காண்டம் - வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன் வழக்கௌ, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றி கூறுவது.
ஏழாவது காண்டம் - திருமணம் பற்றியும் வாழ்க்கைத்துணைவர் பற்றிய விபரங்களையும் கூறுவது.
எட்டாவது காண்டம் - உயிர்வாழும் காலம், உயிராபத்துக்கள் பற்றி கூறுவது
ஒன்பதாவது காண்டம் - தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுவது
பத்தாவது காண்டம் - தொழில்பற்றி கூறுவது
பதினோராவது காண்டம் - இலாபங்கள் தொடர்பாக கூறுவது
பன்னிரண்டாவது காண்டம் - செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் போன்றவை பற்றி கூறுவது.
சாந்தி காண்டம் - ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றுக்கான பரிகாரங்கள் பற்றி கூறுவது.
தீட்சை காண்டம் - மந்திரம் யந்திரம் போன்றவை பற்றியது
ஔஷத காண்டம் - மருத்துவம் பற்றி கூறுவது
திசாபுத்தி காண்டம் - வாழ்க்கையில் நடக்கும் திசைகள்பற்றியும் அவற்றின் விளைவுகளையும் விபரங்களையும் கூறுவது