ஜோதிடம் அறிவோம்: கிரகங்களின் வீடுகள்


ஜோதிடம் அறிவோம்: கிரகங்களின் வீடுகள்

27 நட்சத்திங்கள்
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சத்யம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை 27 நட்சத்திரங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
 ராசி மண்டலம்

ராசி மண்டலத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற வரிசைமுறையில் 12 ராசிகள் வழங்கப்படுகின்றன.


மேஷம், விருச்சிகம் - செவ்வாய்க்கு சொந்த வீடுகள்.
ரிஷபம் , துலாம் - அதிபதி - சுக்கிரன்.
மிதுனம், கன்னி - அதிபதி - புதன்
கடகம் - அதிபதி  - சந்திரன்
சிம்மம் - அதிபதி - சூரியன்
தனுசு , மீனம் - அதிபதி - குரு
மகரம் , கும்பம் - அதிபதி - சனி

ராகு, கேதுக்கு சொந்த வீடுகள் இல்லை. எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ , அதுவே அவர்களுக்கு வீடுகள் .
சூரியன் - மேஷத்தில் உச்சம் - துலாமில் நீச்சம்
சந்திரன்- ரிஷபத்தில் உச்சம் - விருச்சிகத்தில் நீச்சம்
செவ்வாய் - மகரத்தில் உச்சம் - கடகத்தில் நீச்சம்
புதன் - கன்னியில் உச்சம் - மீனத்தில் நீச்சம்
குரு - கடகத்தில் உச்சம் - மகரத்தில் நீச்சம்
சுக்கிரன் - மீனத்தில் உச்சம் - கன்னியில் நீச்சம்
சனி - துலாமில் உச்சம் - மேஷத்தில் நீச்சம்
ஒரு கிரகத்தின் உச்ச வீட்டில் இருந்து ஏழாவது வீடு அந்த கிரகத்துக்கு நீச்ச வீடு..உதாரணத்திற்கு சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார்..மேஷத்தில் இருந்து ஏழாவது வீடு துலாம் , அங்கு சூரியன் நீச்சம் பெறுகிறார்..

ராகு கேதுவிற்கு உச்ச வீடு நீச்ச வீடு என்று எதுவும் இல்லை..சிலர் கூறுவார் ராகுவிற்கு ரிஷபம் உச்ச வீடு - விருச்சிகம் நீச்ச வீடு , கேதுவிற்கு விருச்சிகம் உச்ச வீடு - ரிஷபம் நீச்ச வீடு என்று..ஆனால் புராண ஜோதிட நூல்களில் அதற்க்கான ஆதாரம் இல்லை..எனவே தான் வாரத்தில் ஏழு நாட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டு ராகு கேதுவிற்கு தனியாக நாட்கள் இல்லை..
 நட்பு வீடுகள் .

சூரியன் - விருச்சிகம் , தனுசு , கடகம் , மீனம் .
சந்திரன் - மிதுனம் , சிம்மம் , கன்னி .
செவ்வாய் - சிம்மம் , தனுசு , மீனம்
புதன் - ரிஷபம் , துலாம் , சிம்மம்.
குரு - மேஷம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம்.
சுக்ரன் - மிதுனம் , தனுசு , மகரம் , கும்பம் .
சனி - ரிஷபம் , மிதுனம்.
ராகு , கேது - மிதுனம் , கன்னி , துலாம் , தனுசு , மீனம் , மகரம்.

பகை வீடுகள்.

சூரியன் - ரிஷபம் , மகரம் , கும்பம் .
சந்திரன் - எல்லா வீடுகளும் நட்பு . ( பகை வீடுகள் கிடையாது )
செவ்வாய் - மிதுனம் , கன்னி .
புதன் - கடகம் , விருச்சிகம் .
குரு - ரிஷபம் , மிதுனம் , துலாம் .
சுக்ரன் - கடகம் , சிம்மம் .
சனி - கடகம் , சிம்மம் , விருச்சிகம் .
ராகு , கேது - கடகம் , சிம்மம .

ஒருவரது ஜாதகத்தில் லக்னம் எங்கு குறிக்கப்பட்டுள்ளதோ அதனை ஒன்றாம் வீடாகக் கொண்டு எண்ணுதல் வேண்டும்.

உதாரணமாக மேஷம் 1-வது வீடு எனக் கொண்டால் மிதுனம் 3-ம் இடம். சிம்மம் 5-ம் இடம். ராசி வேறு லக்னம் வேறு என்று ஜோதிடவியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீடு எதுவோ அதுவே அவரது ராசி வீடு.

சூரிய உதயாதி நாழிகை முதல் கணக்கிட்டு குழந்தை பிறந்த காலம் வரையுள்ள வித்தியாசத்தைக் கணக்கிட்டு, அந்த நேரத்தில் என்ன லக்னம் வருகிறதோ அதுவே அந்தக் குழந்தையின் லக்கினம்.


திரிகோண ஸ்தானங்கள்

லக்னத்துக்கு 1, 5, 9-ம் வீடுகளுக்கு திரிகோண ஸ்தானங்கள் என்று பெயர்.

ராசி பலன்கள் அறிய ராசி பலன்கள் என்பதை கிளிக் செய்யவும்