சாத்தூர்
இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு ல் இருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியே சாத்தூர். இது விருதுநகர் மாவட்டத்தின் ஒரு தொகுதியாகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா பகுதி-கொங்களாபுரம் கிராமம்.
சிவகாசி தாலுக்கா (பகுதி) - அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள். தாயில்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலங்குளம் (சென்சஸ் டவுன்).
இராஜபாளையம் தாலுக்கா (பகுதி) - கீழராஜகுலராமன், மேலராஜகுலராமன், சம்சிகாபுரம், இராமலிங்காபுரம், வரகுணராமபுரம், கோபாலபுரம், குறிச்சியார்பட்டி, சோழபுரம், நத்தம்பட்டி, வடகரை, தென்கரை மற்றும் கொருக்காம்பட்டி கிராமங்கள்.
சாத்தூர் தாலுக்கா (பகுதி) - அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடமலபுரம், படந்தால், கத்தாளம்பட்டி, ஆலம்பட்டி, பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, சாத்தூர், ஒத்தையல் மேட்டுபட்டி, பந்துவார்பட்டி, சூரன்குடி, ஓத்தையால், கங்காரகோட்டை, சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, சேவல்பட்டி,, குகன்பாறை, சிப்பிபாறை, சேர்வைகாரன்பட்டி, சாணான்குளம், ஊத்துப்பட்டி, இ.இராமநாதபுரம் மற்றும் டி.ரெட்டியாபட்டி கிராமங்கள்.
சாத்தூர் (நகராட்சி) மற்றும் இலாயிரம்பண்ணை (சென்சஸ் டவுன்).
காமராஜர், கலைஞர் ஆகியோர் உள்பட பல பிரபலங்கள் ருசித்த சாத்தூர் காராச்சேவு, இன்றளவும் அதன் காரம் குறையாமல் காணப்படுகிறது. எல்லா ஊர்களிலும் காராச்சேவு விற்பனை செய்யப்பட்ட போதிலும், சாத்தூர் காராச்சேவுக்கு என்றுமே ஒரு மவுசு உண்டு. இங்குள்ள நீர் ஆதாரங்கள், விளையும் மிளகாய் வற்றலின் காரம், சேவு தயாரிப்பவர்களின் கைவண்ணம், தரம் ஆகியவை, மற்ற ஊர் சேவுகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. சாத்தூர் சுற்றுப்புற கிராமங்களில் பனைமரங்கள் அதிகம் காணப்படுவதால், பனை வாசம் கொண்ட ஓலைக் கொட்டான்களில் சேவுகளை விற்பனை செய்வது முன்பு வழக்கம். பனை ஓலை சேவுகள் மிகவும் வாசனையாகவும் சுவையாகவும் காணப்படும். காலச் சூழ்நிலைக்கேற்ப இப்போது பாலிதீன் பைகளிலும் துணிப்பைகளிலும் சேவு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் எந்த மூலையிலும் ஒரு பொருள் பிரபலமாகிவிட்டால் அதன் கிளை அங்கு தொடங்கப்படும், உதாரணமாக திருநெல்வேலி இருட்டு கடை அல்வா, மணப்பாறை முறுக்கு என்று.... பொதுவாக, ஒரு ஊரில் ஒரு பொருள் பிரபலம் என்றால் அந்த ஊரில் எங்கு திரும்பினாலும் அந்த பொருளை பார்க்க முடியும், உதாரணமாக நெல்லை அல்வா, மதுரை ஜிகர்தண்டா, சிவகாசி பிரிண்டிங். காரசேவுக்கு இந்த ஊர் பிரபலம். சாத்தூரைக் கடந்து செல்லும் பயணிகள் மறக்காமல் சேவு வாங்கிச் செல்வது இன்றைக்கும் மாறவில்லை. தலை தீபாவளி கொண்டாடும் தம்பதிகளுக்கு சீர் பலகாரமாக சாத்தூர் சேவு அளிப்பதும் வழக்கம். சிங்கப்பூர், மலேசியா உள்பட உலகின் பல நாடுகளுக்கும் சாத்தூர் சேவு பறந்து செல்கிறது.சாத்தூரிலிருந்து சென்னைக்கு இன்றும் பல அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கும், சினிமா கலைஞர்கள், நடிகர்கள் என பலருக்கும் இங்கிருந்து பார்சலாகப் போகிறது. குற்றாலம், நாகர்கோவில், கன்னியாகுமரின்னு இந்தப் பக்கம் செல்பவர்கள் சேவு பார்சல் வாங்கிக்கொண்டு செல்வார்கள். இந்தப் பக்கம் ஷூட்டிங் வரும் நடிகர்கள் கடைக்கே வந்து வாங்கிவிட்டுப் செல்வார்கள்.அவ்வளவு ருசி சாத்தூர் சேவுக்கு. இந்த சேவில் சேர்க்கும் பூண்டு, பெருங்காயம் நன்கு செரிமானம் ஆகும். அதிகம் எண்ணெய் இல்லாமல் நாக்குக்கு ருசியோடு உடம்புக்கு நல்லதாகவும் இருப்பதால் நாலா பக்கமும் தேடி வருகிறார்கள். மாசி மாதம் தென் மாவட்டங்களில் உள்ள குலதெய்வக் கோயில்களுக்கு வர்றவங்க, சாத்தூர் சேவு வாங்கி பிரசாதம் மாதிரி கொண்டு போவாங்க. இவ்வளவு ருசிக்கு கொடைக்கானல் பூண்டு ஒரு காரணம்.அதோட தரமான கைப்பக்குவமும், சுத்தமான கடலை எண்ணெய், கடலைமாவு போன்ற தரமான சேர்க்கை.
காரசேவு செய்யும் முறை...... கடலைமாவு - 2 கப் ( 400 கிராம்) பச்சரிசிமாவு - 2 தே கரண்டி வெண்ணை - 5 தே கரண்டி காரப் பொடி - 1 தே கரண்டி வெள்ளைப்பூண்டு - 4 பல் மிளகு - 1 தே கரண்டி பெருங்காயம் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்க்கு
முதலில் பூண்டு மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். மிளகைப் பொடி செய்துக் கொள்ளவும். வெண்ணை,உப்புத,காரப்பொடி,கடலைமாவு, அரிசிமாவு, அரைத்து வைத்திருக்கும் விழுது, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் காராச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறுது மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்த்துக் கொள்ளவும். மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். இதே போல் எல்லா மாவையும் பொரித்து எடுக்கவும். மாவை சற்று இறுக்கமாக பிசைந்து கொண்டால்தான் தேய்ப்பதற்கு வசதியாக இருக்கும். தளர்வாக இருந்தால் தேய்க்கும் போது பூந்தி போன்று முத்துமுத்தாக விழுந்துவிடும். காரசேவுக்கு என்றே அச்சு பலகைகள் உள்ளன. அது இல்லையெனில் சற்று பெரிய ஓட்டைகள் உடைய பெரிய அளவிலான சாரணியை இதற்கு பயன்படுத்தலாம். காரசேவு நீள நீளமாக விழ வேண்டும். அதற்கு கெட்டியான மாவினை சாரணி மீது வைத்து முதலில் கையினால் நேராக, மேலிருந்து கீழ், அழுத்தவேண்டும். மாவு நீளமாக வெளிவரும். குறிப்பிட்ட நீளம் வந்தவுடன், மேலே மாவினை முன்னோக்கி தள்ளினால், நீளமாக வெளிவந்த மாவு துண்டுகளாகி விழும். இதுதான் காரசேவு பிழிவதற்கான முறை.